83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் புறப்பட்டது. 

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் கப்பல் போக்குவரத்து கடந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்டது. 

Night
Day