CAA-வை தடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை - அண்ணாமலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்பதை கூட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியாதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் ஸ்டாலின் வரலாற்று புத்தகத்தை படித்து அரசியலமைப்பு சட்டம் குறித்து தெளிவு பெற வேண்டும் என சிஏஏ குறித்து முதல்வரின் நிலைப்பாட்டை குறிப்பிட்டு அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். சி.ஏ.ஏ குடியுரிமையை கொடுக்குமே தவிர பறிக்காது என விளக்கம் அளித்தார்.

Night
Day