எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து மாகாணத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர்.இராஜன் நடராஜன் அவர்களின் தாயார் இரா.நல்லம்மாள் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், புதுக்கோட்டை மாவட்டம் மேலமுத்துகாடு கிராமத்தைச் சேர்ந்தவ
ரும், அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து மாகாணத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான டாக்டர் இராஜன் நடராஜன் அவர்களின் தாயார் இரா.நல்லம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்தார்.
அம்மையார் நல்லம்மாள் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.