ED அலுவலகத்தில் கே.என்.நேரு சகோதரரிடம் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

 திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பர திமுக அரசில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் கிருஷ்ணபுரி தெருவில் ரவிச்சந்திரன் வசித்து வரும் வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த நிலையில் இன்று காலை முதல் ரவிச்சந்திரனை அவரது வீட்டில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து முக்கிய கோப்புகளுடன் ரவிச்சந்திரனை காரில் ஏற்றி அழைத்துச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day