SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் சார்பில் 4வது சர்வதேச மாநாடு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராமாபுரம் SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின், அறிவியல், மனிதவியல் புலம், உயிர்தொழில்நுட்பத் துறை சார்பில் 4-வது சர்வதேச மாநாடு கடந்த பிப்ரவரி 27, 28ஆம் தேதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. 


இந்த மாநாடு மலேசியாவின் யூனிவர்சிட்டி சுல்தான் ஜைனல் அபிடின் மற்றும் இன்டி இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி & கல்லூரிகள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் மொத்தம் 150 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் இளங்கலை, முதுகலை, மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்களை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

Night
Day