மருத்துவம்
திருப்பூர் அருகே போலி பெண் மருத்துவர் கைது
திருப்பூர் தட்டான்குட்டை பகுதியில் போலி மருத்துவர் பார்த்து வந்த பெண் கை...
உலகில் முதன்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனித உடலில் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 62 வயதான முதியவர் ஒருவர் நீரிழிவு சிகிச்சைக்காக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தினர். பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதியவர் தற்போது நன்றாக உடல்நலம் தேறி வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்தப் புதிய சிறுநீரகம் பல ஆண்டுகள் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் தட்டான்குட்டை பகுதியில் போலி மருத்துவர் பார்த்து வந்த பெண் கை...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...