அரசு மருத்துவர் மீது கொலைவெறித் தாக்குதல் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும், தமிழ்நாட்டில் அப்பாவி பொதுமக்களில் தொடங்கி மருத்துவர்கள் வரை யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை இந்த நிகழ்வு காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழலிலும், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை என பதிவிட்டுள்ள அன்புமணி, மருத்துவரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Night
Day