எழுத்தின் அளவு: அ+ அ- அ
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் 2 நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என இதய நல மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ரஜினியை, அவரது நண்பரான இதய நல மருத்துவர் சொக்கலிங்கம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் நமது ஜெயா தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் முன்கூட்டிய மருத்துவரை அணுகியதால் பெரிய இழப்பு இல்லாமல் இதயத்தை காப்பற்றிக் கொண்டதாக தெரிவித்தார். மேலும் சிகிச்சைக்கு பின் 3 வாரங்கள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், இதய ரத்த நாள பிரச்சினையை ரஜினிகாந்த் முன்கூட்டியே கண்டறிந்தததால் பெரிய பிரச்சனை தவிர்க்கபட்டதாகவும் சொக்கலிங்கம் கூறினார்.