எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 18 லட்சம் பேருக்கு இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதய பாதிப்புக்கு மிக முக்கிய காரணமாக எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகளவு உட்கொள்வதே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எண்ணெயில் பொறித்த உணவுகளால் ஏற்படும் விளைவுகள், உடலை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்வென்று, மருத்துவர்கள் வழங்கும் அறிவுரையை தற்போது காணலாம்
கோடைக்கலாம் முடிந்து மழைக்கலாம் துவங்கியுள்ள நிலையில், சிறிய தேனீர் கடை முதல் பெரிய உணவகம் வரையிலும், எண்ணெயில் பொறித்தெடுத்த பஜ்ஜி, சமோசா, வடை, சிக்கன் பக்கோடா, மீன் பக்கோடா போன்றவற்றினை வாங்கி உண்ணும் பழக்கம் சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை ஆட்கொண்டுள்ளது. இவ்வகையான உணவுகளால் மட்டுமே உடலில் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பள்ளதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
அனைத்து உணவுகளையும் சூடாக உண்பதற்கு ஆசைப்படும் நாம், மழைக்காலத்தில் பஜ்ஜி, போண்டா போன்றவற்றினை உட்கொள்ள அதிகமாக விருப்பப்படுவோம். இவ்வகையான உணவே வயிற்றினை கெடுப்பதற்கும், வாந்தி மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. பயன்படுத்திய எண்ணெய்யை தொடச்சியாக பயன்படுத்தல் மற்றும் அதிக மாசுபட்ட எண்ணெயில் சமைப்பதன் மூலம் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இருதய நோய், புற்றுநோய், உடல் எடை அதிகரிப்பு மற்றும் சுவாச பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்..
தரமற்ற எண்ணெய் உணவுகளை உட்கொள்வதால் உலகளவில் 9 லட்சம் பேருக்கு ஆண்டுதோறும் இதய நோய்களால் ஏற்படுவதாகவும், இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, 2 விதமான எண்ணெய்களை ஒன்றாக சமைப்பது தவறு என கூறுகின்றனர் மருத்துவர்கள்..
உடலுக்கு தேவையான இரண்டு விதமான ஃபேட்டி ஆக்ஸிட்களில், ஒன்று மூஃபா, மற்றொன்று கூஃபா. நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் மோபா கிடைக்கும் நிலையில், சூரியகாந்தி எண்ணையில் கூஃபா கிடைக்கிறது. இதனால் பொறிப்பதற்கு சூரியகாந்தி எண்ணெய்யும், குழம்பு தாளிப்பதற்கு நல்லெண்ணையையும் உபயோகிக்க வேண்டும் என்பதே மருத்துவர்கின் அறிவுறுத்தலாக உள்ளது..
எண்ணெயில் பொறித்த உணவு வகைகள் பார்ப்பதற்கும், ருசிப்பதற்கும் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அதில் உடலுக்கு கிடைக்கும் சத்தானது சொற்பமானது என்பதை அனைத்து தரப்பட்ட மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். உடலை பாதுகாக்காத்துக்கொள்ள அவித்த மற்றும் வேக வைத்த உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.