இந்தியாவில் குரங்கம்மை நோய் இல்லை - மத்திய அரசு விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் தற்போது வரை குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா தெரிவித்துள்ளார்.  


இந்தியாவில் நேற்று உறுதி செய்யப்பட்ட குரங்கம்மை நோய் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குரங்கம்மை நோய் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பு அதிகம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளை விமான நிலையத்தில் தீவிர சோதனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா தெரிவித்துள்ளார்.

Night
Day