எழுத்தின் அளவு: அ+ அ- அ
இறுதியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பிரபலமான உடல் பருமன் எதிர்ப்பு மருந்தான மௌஞ்சாரோ. மௌஞ்சாரோ மருந்தின் நண்மை என்ன? பாதிப்புகள் என்ன? விரிவாக பார்க்கலாம்...
SLIM FIT.. ZERO SIZE.. என்பது தான் தற்போதை நவநாகரீக இளசுகளின் விருப்பமே. இப்படியானவர்களை குறிவைத்து உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு புதிய 'டயட்' PLAN-கள் சமீபகாலமாக இணையத்தில் டிரெண்டாகி வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தான் Intermittent Fasting, HEAVY WORK OUT, HIGH PROTIEN RICH DIET என எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற ரேஞ்சுக்கு உடல் எடையை குறைக்க திக்குமுக்காடி வரும் மக்களுக்கு வரபிரசாதமாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது Blockbuster weight-loss மருந்தான Mounjaro.
அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான எலி லில்லி அண்ட் கம்பெனி மவுன்ஜாரோ மருந்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஏற்கெனவே இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ள நிலையில் மௌஞ்சாரோ மருந்துக்கு இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மௌஞ்சாரோ என்பது வெறும் BRAND NAME மட்டுமே.Tirzepatide என்பது தான் இந்த மருந்தின் வேதியியல் பெயர். இது உடல் பருமன், அதிக எடை மற்றும் TYPE 2 நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் அதிக ஆற்றல் மிக்க மருந்தாக செயல்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் அதிகமான செயல்திறனை மௌஞ்சாரோ கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் பசியை தூண்டக்கூடிய ஹார்மோன் சுரபியை அதிகரித்து பசியை கட்டுப்படுத்துவதுடன், உணவு சாப்பிட்ட பிறகு அதனை செரிமானம் செய்வதற்கான ஹார்மோன் சுரபியை அதிகரிக்கவும் செய்கிறது மௌஞ்சாரோ. இதன் மூலம் ஒருபக்கம் பசி கட்டுப்படுத்தப்படுவது மட்டுமின்றி மறுபக்கம் உணவை விரைந்து செரிமானம் செய்வதன் மூலம் உடல் எடை ஆட்டோமேட்டிக்காக கட்டுப்படுத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த மருந்து இன்சுலின் INJECTION வடிவில் உடலில் தினந்தோறும் செலுத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மருந்து 5 MG DOSE முதல் 15 MG DOSE வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் 5 MG DOSE மௌஞ்சாரோ மருந்தை நாள்தோறும் உடலில் செலுத்திக்கொள்வதன் மூலம் ஒரே மாதத்தில் சுமார் 15.4 கிலோ வரை உடல் எடையை குறைக்க முடியும் என்றும் அதுவே 15 MG DOSE எடுத்துக்கொண்டால் ஒரே மாதத்தில் 21.8 கிலோ வரை உடல் எடையை குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த மருந்தை பயன்படுத்தும் 3ல் ஒருவருக்கு அவரது மொத்த உடல் எடையில் 25 சதவீதம் வரை ஒரே மாதத்தில் குறைந்திருப்பதாகவும் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
இந்திய சந்தையில் மவுன்ஜாரோ மருந்து 2.5 MG DOSE-ன் விலை 3 ஆயிரத்து 500 என்றும் அதுவே 5 MG DOSE-ன் விலை 4 ஆயிரத்து 375 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை ஒருவர் மாதம் முழுவதும் எடுத்துக்கொண்டால் அதற்கு சுமார் 14 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை தோராயமாக செயவாகும் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் அதேநேரம் இம்மருந்தை தொடர்ந்து எடுப்பதன் மூலம் குமட்டல், அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த மருந்தை நிறுத்தினால் உடனே உடல் எடை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் எனவும் வாழ்நாள் முழுவதும் இம்மருந்தை தொடர்ந்து எடுக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதுமட்டுமின்றி மௌஞ்சாரோ மருந்தை நிறுத்திய பின் ஏற்படும் அதீத உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உடல் எடையை குறைப்பதில் இந்தியர்களுக்கு இருக்கும் அதீத ஆர்வத்தின் பேரில் இந்திய சந்தையை குறி வைத்து Mankind Pharma, Alkem Labs, Dr Reddy’s Laboratories போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதனை சந்தைப்படுத்துவதற்கான உரிமத்தை பெற முட்டிமோதி வருகின்றன. இறுதியாக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இம்மருந்தை எடுக்கக் கூடாது என STRICT ORDER போட்டுள்ளது இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு.