கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில், கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.


கடந்த வாரம் புதன்கிழமை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில், புற்றுநோயியல் துறை மூத்த மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை முடிவடைந்து உடல்நலம் தேறிய அவர், நேற்றிரவு வீடு திரும்பினார். இதனிடையே, பாலாஜியை சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Night
Day