கொசுவர்த்தி சுருளால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வீடுகளில் உபயோகிக்கும் கொசுவர்த்தி சுருள் புகையை சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொசுவர்த்தி சுருளில் கெமிக்கல் கலந்து இருப்பதால் அதை நாம் சுவாசிக்கும் போது நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், வீடுகளில் கொசுவலை போன்றவைகளை பயன்படுத்துவது நன்மை என்றும் நுரையீரல் மருத்துவ நிபுணர் அருண் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார். கொசுவர்த்தி புகை அனைத்து வயதினரையும் பாதிக்கும் என்றாலும், சிறுவர்களையும், முதியவர்களையும் விரைவாக பாதிக்கும் என மருத்துவர் எச்சரித்துள்ளார்.

Night
Day