எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரத்தில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விக்கிரவாண்டி அருகே உள்ள துறவி தாங்கல் கிராமத்தை சேர்ந்த ரெமிஜியுஸ் - ஜெனிபர் தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் மருத்துவப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஜெனீபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கர்ப்பைகுழாயில் அடைப்பு இருப்பதால் அதனை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி ஜெனிபருக்கு அறுவை சிகிச்சை முடிந்த சிலமணி நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து தவறான சிகிச்சை காரணமாகவே ஜெனிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்ககோரி கணவர் ரெமிஜியுஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், ஜெனிபரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைத்தீர்வு ஆணையம் தீர்ப்பு வழங்கியது.