எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரத்தில் தாயின் வயிற்றில் குழந்தை இருந்த போது ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு கை அழுகும் நிலை ஏற்பட்டதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன் தெரிவித்தார்.
மாதம்பாளையம் பகுதியை சேர்ந்த விவேக் - தீபா தம்பதியினருக்கு கடந்த 13ம் தேதி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் வலது கை நாளுக்கு நாள் அழுக தொடங்கியுள்ளது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் வலது கையை அகற்றும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் கை அகற்றவில்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என கூறி வலதுகை அகற்றப்பட்டது. குழந்தை வயிற்றில் இருந்தபோதே ரத்த நாளங்களில் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டு, கை பாதிக்கப்பட்டதாகவும், அது ஸ்கேனில் தெரிய வாய்ப்பில்லை எனவும் குழந்தையின் கையின் நிலை குறித்து பிறந்த போதே அவர்களது பெற்றோர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன் தெரிவித்தார்.