எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு மாதத்தில் மட்டும் 450க்கும் அதிகமானோர் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பரவி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நடப்பு மாதத்தில் மட்டும் சுமார் 450-க்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மழை காரணமாக தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் சுகாதாரத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.