நெல்லை மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் - சிகிச்சைபெற முடியாமல் தவிப்பதாக நோயாளி வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உயிரை காக்கும் மருத்துவரின் உயிரை பறிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, போராட்டம் நடத்தினர். இதில், அரசு உதவி மருத்துவர்கள், பேராசிரியர்கள், முதுநிலை மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

Night
Day