போட்டிகளில் காயமடையும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இலவச சிகிச்சை

எழுத்தின் அளவு: அ+ அ-

விளையாட்டுப் போட்டிகளின் போது காயமடையும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ரேலா மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்‍கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை, அபினவ் பிந்தரா பவுண்டேஷன் மற்றும் எஸ்ஓஏஆர் டிரஸ்ட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி போட்டியின் போது காயமடையும் விளையாட்டு வீரர்களுக்கு ரேலா மருத்துவமனை இலவச சிகிச்சை அளிக்க உள்ளது. எலும்பியல், முதுகுத்தண்டு மற்றும் விளையாட்டு காயங்களுக்கான சிகிச்சைக்கு ஸ்பைன் அன்ட் ஆர்த்தோபெடிக்ஸ் ஆக்ஷன் அண்ட் ரீசர்ச் டிரஸ்ட் நிதி வழங்க உள்ளது. அறுவை சிகிச்சைகளுக்கு, புதிய வைப்பு சாதனங்களை அபினவ் பிந்த்ரா பவுண்டேஷன் வழங்கும் என ரேலா மருத்துவமனை தலைமை பேராசிரியர் டாக்டர் ரேலா தெரிவித்தார்.

varient
Night
Day