எழுத்தின் அளவு: அ+ அ- அ
திரைப் பிரபலங்கள் டெர்மடோமயோசிடிஸ் நோயால் பாதிக்கப்படுவதால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்... தசை நோயான டெர்மடோமயோசிடிஸ் என்றால் என்ன? எதனால் இந்த நோய் தாக்குகிறது? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு
இந்தியாவில் தற்போது புது வகையான நோய்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது...
"மயோசிடிஸ் " எனப்படும் தசை அழற்சி நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தற்போது நடிகர் அமீர் கானின் தங்கல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை சுஹானி, தமது 19வது வயதிலேயே, டெர்மடோமயோசிடிஸ் Dermatomyositis எனப்படும் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
அரிய வகை நோயால் சுஹானி மரணம் அடைந்துள்ளது, ஒட்டுமொத்த திரை உலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தோல் மற்றும் தசை தொடர்புடைய நோயான டெர்மடோமயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களில் 5 சதவீதம் பேர் தீவிர பாதிப்பதாக ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
டெர்மடோமயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 20 சதவீதம் பேர் மட்டுமே உரிய சிகிச்சைக்கு பின் குணமடைகின்றனர் என்றும், எஞ்சியோர் குணமடைய நீண்ட நாட்கள் ஆவதாகவும் மருத்துவ உலகம் கூறுகிறது...
இந்த அரியவகை டெர்மடோமயோசிடிஸ் நோய் தோலும் தசையும் இணைந்து ஏற்படும் அழற்சியால் உண்டாவதாகவும், மரபணு பாதிப்புகளால் உண்டாகக் கூடியது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்...
மரபணு பாதிப்புகள் உண்டான நபர்களுக்கு வைரஸ் பாக்டீரியாக்களின் தாக்கத்தின் காரணமாக டெர்மடோமயோசிடிஸ் நோய் உண்டவதற்கான தூண்டுதல்களை ஏற்படுத்துவதாக சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர் திலகவதி கூறுகிறார்.
தசை துவண்டு போவது, உடல் சோர்ந்து காணப்படுவதும், முகம் மற்றும் நெஞ்சு ஆகிய பகுதிகளில் சிகப்பு நிற தடுப்புகள் ஏற்படுவதும் இந்த நோயின் பிரதான அறிகுறியாக உள்ளது...
திடீர் உடல் எடை குறைவது,காய்ச்சல் உண்டாவது உள்ளிட்டவைகள் டெர்மடோமயோசிடிஸ் ஆரம்ப கால அறிகுறிகள் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தசைகளில் பாதிப்புகளை ஏற்படுவது மட்டுமல்லாமல் உடலின் உள் உறுப்புகளான நுரையீரல் இதயம் ஆகியவற்றிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று கூறும் மருத்துவர்கள், புற்றுநோய் உண்டாக்குவதற்காக வாய்ப்புகளும் உள்ளது என்கின்றனர்.
உள் உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயின் வெளிப்பாடாக கூட இந்த டெர்மடோமயோசிடிஸ் இருக்கலாம் என்று கூறும் மருத்துவர்கள், நோய்க்கான அறிகுறி தென்பட்டால், டெர்மடோமயோசிடிஸ் புற்றுநோய் தாக்கம் உள்ளதா அல்லது உள் உறுப்புகளில் பாதிப்புகள் உள்ளதா என்பதை மருத்துவமனைகளில் பரிசோதனைகள் செய்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
டெர்மடோமயோசிடிஸ் நோய் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்பட கூடியது என்ற மருத்துவர்கள், 5லிருந்து 14 வயதுடைய குழந்தைகள், 40 முதல் 50 வயதுடையவர்களை இந்நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தசை துவண்டு போதல் தோல்களில் சிவப்பு நிற தடுப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக உரிய மருத்துவர்களை அணுகி தொடர் சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்...