மருத்துவருக்கு கத்திக்குத்து - விக்னேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணியாற்றி வரும் பாலாஜியை, கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவரின் அறையிலேயே வைத்து விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, விக்னேஷிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் தரக்கூடாது என்ற காவல்துறையின் கோரிக்கையை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Night
Day