மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது - மருத்துவர் கிருஷ்ண பிரபு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் மருத்துவர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நெல்லையில் பேசிய தனியார் மருத்துவர் கிருஷ்ணபிரபு, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என கூறினார். மருத்துவர் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Night
Day