வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர், மருத்துவர்கள் இல்லாததால் உயிரிந்ததாக கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், வயிற்றுவலி காரணமாக நேற்று கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு, பித்தப்பை கல் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க முடியாமல், கிண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட விக்னேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலை நிறுத்தம் காரணமாக மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காததே விக்னேஷ் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி, மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Night
Day