எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
இது குறித்து பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளையாட்டில் அரசியலை கலப்பது நல்ல விஷயம் அல்ல என்று கூறினார். 2015ம் ஆண்டு பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் சென்றதை சுட்டிக் காட்டிய தேஜஸ்வி யாதவ், எல்லோரும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதில்லையா என்றும் இந்தியா ஏன் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். பிரதமர் பாகிஸ்தான் சென்று பிரியாணி சாப்பிடும் போது, போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஏன் அங்கு செல்ல கூடாது என்றும் தேஜஸ்வி யாதவ் கூறினார்.