"பாக். வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி மலிவான மனநிலை கொண்டவர்" - யுவராஜ் சிங்கின் தந்தை சாடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி மலிவான மனநிலை கொண்டவர் என முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் சாடியுள்ளார். 


ஐசிசி சாம்பியன்சிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய வீரர் விராட் கோலியின் சதத்திற்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் இந்தியா வெற்றி பெற 17 ரன் தேவையாக இருந்தது. அப்போது பந்து  வீசிய அஃப்ரிடி நான்கு வைட் பந்துகளை வீசியது பலரின் கண்டனத்திற்குள்ளானது. தனியார் தொலைக்காட்சி  ஒன்றில் இதுகுறித்து பேசிய யோகராஜ் சிங், விராட் கோலி சதமடித்துவிடக் கூடாது என்ற மலிவான எண்ணத்தில் வேண்டும் என்றே வைட் பந்து வீசியதாக குற்றம் சாட்டினார். மாறாக அவருக்கு திறமையிருந்தால் விராட் கோலியை அவுட் செய்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

Night
Day