"புரட்சித்தலைவி அம்மா" பிறந்தநாள் - ஈரோட்டில் மின்னொளி கிரிக்கெட் போட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவி அம்மாவின் 77 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் திருநகர் காலனி பகுதியில் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆசியுடன், ஈரோட்டில் மாபெரும் இரண்டாம் ஆண்டு மின்னொளி கிரிக்கெட் திருவிழா பகலிரவு ஆட்டமாக 2 நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 அணிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழல் கோப்பையும், 2வது பரிசாக 15 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழல்கோப்பையும், 3வது பரிசாக பத்தாயிரம் ரூபாய் மற்றும் சுழல் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. நான்காவதாக வெற்றி பெறும் அணிக்கு 5 ஆயிரத்து 77 ரூபாய் மற்றும் சுழல் கோப்பையும், 5வதாக வெற்றி பெறும் அணிக்கு 2 ஆயிரத்து 27 ரூபாய் மற்றும் சுழல் கோப்பையும் வழங்கப்படவுள்ளது. 

ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் சௌகத் அலி தலைமையில் நடைபெறும் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கழக நிர்வாகி செல்வகுமார் நாணயத்தை சுண்டி விட்டு போட்டியை தொடங்கி வைத்தார். கழக நிர்வாகிகள் அக்னி பாபு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த மின்னொளி கிரிக்கெட் திருவிழாவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Night
Day