அட்டவணையால் இந்திய அணிக்கு எவ்வித நன்மை கிடையாது - ரோஹித்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய அணிக்கு சாதகமாக ஐசிசி செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இப்போட்டி குறித்தும் ஐசிசி குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். இது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, போட்டியின் அட்டவணைகளால் இந்திய அணிக்கு எவ்வித நன்மையும் கிடையாது எனவும், இந்திய அணி வீரர்கள் பல்வேறு விதமான மைதானங்களில் விளையாடியுள்ளதே எங்களின் வெற்றிக்கு காரணம் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்தார். 

varient
Night
Day