அமெரிக்காவில் நடந்த குத்துச்சண்டை போட்டி - மைக் டைசன் அதிர்ச்சி தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனை யூடியூபர் ஜேக்பால் வென்றார்.

முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியனான மைக் டைசன், இதுவரை விளையாடிய 58 போட்டியில், 50 போட்டிகளில் வெற்றிபெற்று எதிரணி வீரர்களை கதிகலங்க செய்தவர். எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் குத்துச்சண்டையில் பங்கேற்காமல் இருந்த மைக் டைசன், சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்பு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பிரபல யூடியூபர் ஜேக்பாலுடன் மோதினார். இப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற போட்டோ ஷூட்டில் சக போட்டியாளர் ஜேக்பாலை கண்ணத்தில் அறைந்த மைக் டைசனின் காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில், இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜேக்பால், 58 வயதான மைக் டைசன் மீது சரமாரியான குத்துகளை வீசினார். 8 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், மைக் டைசன் 74 புள்ளிகளும், ஜேக் பால் 78 புள்ளிகளும் எடுத்தனர். இதன்மூலம் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் உலக ஹெவிவெயிட் சாம்பியனான மைக் டைசனை, 27 வயதாகும் ஜேக்பால் வென்றார். வெற்றி பெற்ற ஜேக் பாலுக்கு 40 மில்லியன் டாலர்களும், தோல்வி அடைந்த மைக் டைசனுக்கு 20 மில்லியன் டாலர்களும் பரிசாக வழங்கப்பட்டது.

Night
Day