ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி - இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதி போட்யில் இந்தியா- தென்கொரியா அணிகள் இன்று மோதல் உள்ளன. 

6 அணிகள் பங்கேற்ற 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில் இன்று நடக்கும் அரையிறுதியில் நடப்பு சாம்பியனான ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா, அரையிறுதியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Night
Day