ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி - இந்தியா சாம்பியன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

சீனாவில் நடைபெற்று வந்த 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மோதின. இதில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல்கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு 6 முறை முன்னேறியுள்ள இந்திய அணி, கடந்த 2012ம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் கோப்பை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day