எழுத்தின் அளவு: அ+ அ- அ
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர் விராட் கோலி இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதுகு வலி காயத்தால் அவதிப்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயரும் எஞ்சிய போட்டிகிளில் இருக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் வாசிங்டன் சுந்தர், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.