இந்தியன் ஓபன் பாட்மிண்டன் - பி வி சிந்து அதிர்ச்சி தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியன் ஓபன் பாட்மின்டன் தொடர் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். 

டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், இந்தோனேசியாவின் கிரகேனாரியா மரிஸ்காவை, பி.வி.சிந்து எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற 62 நிமிட போட்டியில் பி.வி.சிந்து 9க்கு 21, 21க்கு 19, 17க்கு 21 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி 21க்கு 10, 21க்கு 17 என்ற நேர் செட்களில் கொரியாவின் ஜின் யோங், காங் மின் யுக் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Night
Day