இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நியூசிலாந்து அணி முன்னேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து வெளியிடப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி சில புள்ளிகளை இழந்துள்ளது. தொடரை வென்ற நியூசிலாந்து அணி பட்டியலில் முன்னேற்றம் கண்டது. சில புள்ளிகளை இழந்தாலும் இந்திய தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவும், 3வது இடத்தில் இலங்கையும் உள்ளன. நியூசிலாந்து அணி ஒரு இடம் முன்னேறி 4வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 5வது இடத்திலும், இங்கிலாந்து அணி 6வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள் அணிகள் முறையே 7,8 மற்றும் 9வது இடங்களில் உள்ளன.

Night
Day