இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நாளை நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது. முதலில் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நாளை துவங்க உள்ளது. முதல் 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, அக்சர் பட்டேல், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஹர்ஷிதீப் சிங், முகமது சமி, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் நல்ல பார்மில் உள்ளது. இந்த நிலையில் இரு அணி வீரர்களும் ஈடன் கார்டன் மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்

varient
Night
Day