இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் வதோதராவில் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. டி20 தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்கும் என்பதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

Night
Day