இந்திய அணி வீரர் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு, உலக கோப்பை போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து முகமது ஷமி விலகியிருந்தார். மேலும் அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இந்நிலையில் லண்டனில் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள முகமது ஷமி, மீண்டுவர சிறிதுகாலம் எடுக்கும், விரைவில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

varient
Night
Day