இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி : பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை மனாமி சுய்சுவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Night
Day