இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் கவுதம் கம்பீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி-20 உலகக்கோப்பையோடு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அடுத்த தலைமைப் பயிற்சியாளரை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கவுரம் கம்பீர் பயிற்சியாளராக செயல்பட்ட கொல்கத்தா அணி கோப்பையை வென்று அசத்தியுள்ள நிலையில், அவரே நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Night
Day