இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்வோரை கொண்ட சி.எஸ்.கே அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட ஐ.பி.எல் அணிகளின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. பல நாடுகளை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் கலந்து கொள்வதால் இந்த 17-வது சீசன் தொடர் உலகம் முழுவதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளின் சமூக வலைதள பக்கங்களை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அந்த வகையில், ஒரு கோடியே 40 லட்சம் ஃபாலோவர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம் பிடித்துள்ளது. ஒரு கோடியே 30 லட்சம் மில்லியன் ஃபாலோவர்களுடன் கோலி, மேக்ஸ்வெல் அடங்கிய பெங்களூரு அணி 2-வது இடம் பிடித்துள்ளது. முன்னதாக 2-வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கத்தின் காரணமாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோவர்களை இழந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

Night
Day