இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென்னாப்பிரிக்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் இணைந்து நடத்தி வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான், தென்னாப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 11 புள்ளி 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தென்னாப்ரிக்கா அணிக்கு 57 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தனர். பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணி 8 புள்ளி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 60 ரன்கள் எடுத்து போட்டியை வென்றனர். இப்போட்டியில் வென்றதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தென்னாப்ரிக்கா அணி நுழைந்துள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகக்குறைவான ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் அணி படைத்துள்ளது.

Night
Day