இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினோத் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். மகளிர் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் வினோத் போகத் பெற்றுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் வினோத் போகத், கியூபாவின் உஸ்னேலிஸ் கஸ்மான் லோபசை எதிர் கொண்டார். போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய வினோத் போகத் 5க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினோத் போகத் படைத்தார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சாரா ஆன் ஹைல்ட்பிராண்டை, வினோத் போகத் எதிர்கொள்கிறார்.

Night
Day