உலக கோப்பை வில்வித்தைப் போட்டி : இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. தென்கொரியாவில் உலகக்கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் துருக்கிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா சார்பாக ஜோதி, அதிதி, பர்னீத் ஆகியோர் களமிறங்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒரு செட்டை கூட விட்டுக்கொடுக்காமல் 232 - 226 என்ற புள்ளிக் கணக்கில் துருக்கியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இந்தியா தொடர்ந்து 3வது முறையாக உலகக் கோப்பையில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

Night
Day