எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் குகேஷுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் குகேஷுக்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
திரு. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெறும் இரண்டாவது இந்தியர் என்ற இமாலய சாதனையை படைத்திருப்பதன் மூலம் இளம் வீரர் குகேஷ் அவர்கள் தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது குகேஷ் அவர்களின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி ஆகும் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
உலக செஸ் சாம்பியன் குகேஷ் மென்மேலும் பல வெற்றிகளை பெற்று, வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.