என் வாழ்நாள் உள்ளவரை தோனிக்கு நன்றியுடன் இருப்பேன் - ரவிச்சந்திரன் அஷ்வின்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

என் வாழ்நாள் உள்ளவரை தோனிக்கு நன்றியுடன் இருப்பேன் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார். 

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்ந்தி சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் 500 என்ற எண்களால் பதியப்பட்ட 500 தங்க காசுகளும், ஒரு கோடி ரூபாய் ரொக்கமும் அஷ்வினுக்கு பரிசாக வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஐசிசி தலைவர் சீனிவாசன், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், அணில் கும்ப்ளே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

பின்னர் பேசிய அஷ்வின், தான் இந்த இடத்தற்கு வருவேன் என்று எதிர் பார்க்கவில்லை என்றும், தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். தன் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது 2008ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியே என்று கூறிய அஷ்வின், அதில் தனக்கு பல வாய்ப்புகள் அளித்து ஊக்கமளித்த மகேந்திர சிங் தோனிக்கு, தன் வாழ்நாள் உள்ளவரை நன்றியுடன் இருப்பேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார். 

Night
Day