ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ளும் ஹைதராபாத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடப்பு ஐபிஎல் தொடரின் நாளைய இறுதிப்போட்டியில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகியவை தரவரிசை பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழந்தன. பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதிய முதல் தகுதிச்சுற்று போட்டியில், வெற்றிபெற்ற கொல்கத்தா அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதனையடுத்து நடைபெற்ற வெளியேற்றும் சுற்றில், பெங்களூருவை வீழ்த்திய ராஜஸ்தான் அணி, நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன்மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. 

Night
Day