ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். 22வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன. 

நடப்பு ஐபிஎல் சீசனின் 22வது லீக் ஆட்டம் பஞ்சாப், முல்லன்புர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி நடைபெறுகிறது. இதில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இதுவரை 3 போட்டிகளில் விளையாடி இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றது. 3வது போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. சென்னை அணி விளையாடிய 4 போட்டிகளில் முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்து விளையாடிய 3 போட்டிகளிலும் சென்னை ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. இப்போட்டியில் சென்னை வெற்றி பெற்று தொடர் தோல்வி இருந்து மீண்டு வருமா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Night
Day