எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 287 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த அணி என்ற தன்னுடைய சாதனையை தானே முறியடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
பெங்களூரில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையான போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டம் இழக்க டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இதை அடுத்து களமிறங்கிய கிளாசன் அரை சதம் விளாச ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்தது. இதற்கு முன்பாக ஹைதராபாத் அணி இதே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன்களாக இருந்த நிலையில் தற்பொழுது ஹைதராபாத் அணியின் சாதனையை அதே அணி முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.