ஐ.பி.எல். - மும்பையை வீழ்த்தி சென்னை அசத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் தொடரின் 3வது போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி சார்பாக, ரோகித் சர்மா பூஜ்ஜியம், வில் ஜாக்ஸ் 11, சூர்யகுமார் 29, திலக் வர்மா 31 ரன்கள் எடுத்த நிலையில், சென்னை அணி சார்பாக, நூர் அகமத் 4 விக்கெட்டும், கலில் அகமத் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, 19 புள்ளி ஒரு ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக, கேப்டன் ருதுராஜ் 53 ரன்னும், ரச்சின் ரவிந்திரா 65 ரன்னும் எடுத்தனர். 

Night
Day