ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை மறைந்த தனது வளர்ப்பு நாய்க்கு அர்ப்பணித்த நீச்சல் வீராங்கனை

எழுத்தின் அளவு: அ+ அ-


பாரிஸ் ஒலிம்பிக்கில் தான் பெற்ற தங்க பதக்கத்தை இறந்து போன தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு அர்ப்பணித்த நெதர்லாந்து வீராங்கனையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் மகளிருக்கான 10 கிலோ மீட்டர் மாரத்தான் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றவர் நெதர்லாந்து வீராங்கனை ஷேரோன் வான் ரவுண்டால். இந்த வெற்றி குறித்து பேசிய அவர், இரண்டு மாதங்களுக்கு முன் தன்னுடைய வளர்ப்பு நாய் ரியோ காலமாகிவிட்டதாகவும், ரியோ புதைக்கப்பட்ட மூன்றாம் நாளில் தனது கையில் டாட்டூ வரைந்தேன் என ஷேரோன் கூறினார். மேலும், ரியோவுக்காக தங்கம் வெல்ல வேண்டும், அவனுக்காக அதை அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியில் கலந்து கொண்டு சாதித்தேன் என கூறியுள்ளார்.

varient
Night
Day