ஒலிம்பிக் வில் வித்தை - காலிறுதிக்கு இந்திய அணி தகுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வருகிற 26 ஆம் தேதி ஒலிம்பிக்‍ போட்டிகள் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் வில்வித்தை ​போட்டியில் இந்திய மகளிர் அணியில் உள்ள அங்கிதா 11இடத்திலும், பாஜன் கவுர் மற்றும் தீபிகா முறையே 22 , 23 ஆகிய இடங்களிலும் உள்ளனர். 
இந்திய அணி ரேங்கிங் பிரிவில்  1983 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியது. இதன் மூலம் நாளை நடைபெற உள்ள காலிறுதிப்போட்டிக்‍கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்திய வில்வித்தை மகளிர் அணி பிரான்ஸ் அல்லது நெதர்லாந்து அணியை  பெண்கள் அணியுடன் மோதும். தென்கொரிய மகளிர் அணி 2 ஆயிரத்து 46, சீனா ஆயிரத்து 996 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் மெக்‍சிகோ ஆயிரத்து 986 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.

Night
Day