கிரிக்கெட் போட்டிகளில் "ஸ்டாப் க்ளாக்" விதிமுறையை அமல்படுத்திய ஐசிசி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஸ்டாப் க்ளாக் விதிமுறையை அமல்படுத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசும் அணி அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் அதனை சரிசெய்ய ஸ்டாப் க்ளாக் விதிமுறையை ஐசிசி வகுத்துள்ளது. இவ்வகையான விதிமுறையில் பந்து வீசும் அணி, ஒரு ஓவர் முடிவடைந்து அடுத்த 60 வினாடிகளுக்குள் பந்து வீசவில்லை என்றால் அணியின் கேப்டனுக்கு இரண்டு முறை எச்சரிக்கை விடப்படும். அதனை மீறி மூன்றாவது முறை எச்சரிக்கை பெற்றால் 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்பட்டு எதிரணிக்கு வழங்கப்படும். இந்த நடைமுறை வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பையோடு நடைமுறைக்க வரும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது. 

Night
Day